T-20 இல் வெற்றி பெற்றது நெதர்லாந்து அணி

2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து.........

Published February 10, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி 07 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

நமீபியா அணி சார்பில் ஜான் நிக்கோல் லோஃப்டி ஈடன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் பெற்று கொடுத்தனர். 

இந்நிலையில் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *