மீனவர்களின் போராட்டத்தால் அதிகரித்தது மீன்களின் விலை

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி........

Published February 10, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய நிலைமை குறித்து மீன் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இதன் விளைவாக மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 
மீனவர்களின் இந்தப் போராட்டம் மேலும் நீடித்தால், வரும் நாட்களில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *