தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது

2026 T-20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று அகமதாபாத் நரேந்திர..........

Published February 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

2026 T-20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் ரியான் ரிக்கெல்டன் 28 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்தார். மறுமுனையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய குயின்டன் டி கொக் 41 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாகப் பந்துவீச்சில் அணித்தலைவர் ரஷித் கான் சிறப்பாகச் செயல்பட்டு ஒரே ஓவரில் டி கொக் மற்றும் ரிக்கெல்டன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தித் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அஸ்மத்துல்லா உமர்சாய் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி, 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 84 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
பந்து வீச்சில் ​தென்னாபிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, முதலாவது சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணியும் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் சமநிலையில் நிறைவடைந்தது.

அதன்படி, இரண்டாவது சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 23 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *