பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட

Published February 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 6 min read

மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று மாலை நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மன்னாரில் இருந்து இலவன் குளம் ஊடாக புத்தளம் செல்லும் பாதை தொடர்பாக சர்ச்சை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம் .

அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இமற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன.

இந்த நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது.

இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்.

இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.

எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும்.

அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும்.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் .

இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *