உண்ணாவிரதமிருந்த மூவர் வைத்தியசாலையில்

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண.......

Published February 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், இன்று காலை மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தோட்ட நிர்வாகத்தால் 8 தொழிலாளர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. 

குறித்த தோட்டத்தில் பணியாற்றும் 8 தொழிலாளர்களின் சேவையைத் தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

தமது கோரிக்கைகளுக்கு உரியத் தீர்வு கிடைக்காத காரணத்தினால், நேற்றைய தினம் முதல் இவர்கள் தமது போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினர். 

இந்நிலையில், உண்ணாவிரதத்தின் தாக்கம் காரணமாக இன்று காலை மூன்று தொழிலாளர்கள் திடீரென மயக்கமடைந்தனர். 

இதனையடுத்து, அவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *