திருகோணமலை சம்பவம் – பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின்

Published February 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர்களுக்கு ரூ.10,000 ரொக்கப் பிணையிலும் ரூ.1 மில்லியன் மதிக்கத்தக்க இரண்டு தனிப்பட்ட சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, சந்தேக நபர்கள் திட்டமிட்டபடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனும் நிபந்தனை அடிப்படையிலான பிணை இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.

சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *