வரட்சி வானிலையில் மாற்றம்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று முதல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக
Published February 12, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று முதல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும். மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.