பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின்.........

Published February 13, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. 

இதன்படி, அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதேநேரம் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன. 

பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. 

நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *