வெள்ளவத்தையில் இரு பெண்கள் கைது!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில்

Published February 13, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவர் வியாழக்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 36 மற்றும் 41 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *