இலங்கை வந்திறங்கிய இந்திய அணி
T-20 உலக கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கட் அணி நேற்றிரவு........
Published February 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
T-20 உலக கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கட் அணி நேற்றிரவு இலங்கை வந்தடைந்தது. நாளைய தினம் பாகிஸ்தானுடான போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.
நேற்றிரவு 9.45க்கு இந்தியாவின் புதுடில்லி நகரிலிருந்து ஸ்பைய்சி ஜென் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.ஜீ-9250 என்ற விமானத்தின் ஊடாக இந்திய அணி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதேவேளை இந்திய அணியின் வருகையை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.