பிரேமலால் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

கொலைக் குற்றச்சாட்டுக்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள்.......

Published February 14, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கொலைக் குற்றச்சாட்டுக்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த கொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதாக ‘அதா தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

இந்த மேன்முறையீட்டு மனு, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாக வேண்டிய அரசாங்க சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ளதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் விசாரணையை செப்டம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *