பணியின்போது விபத்து : இருவர் பலி
லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு ...........
Published February 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள் இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பண்டாரவளை – பூனாகலை வீதியின் 16-17 கிலோமீற்றர் தூண்களஞக்கு இடையில் இந்தக் கல் குவாரி அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுப்பதற்காக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.