விசேட சுற்றிவளைப்பு – ஒரே நாளில் 560 பேர் கைது!
நேற்று (14) நாடு முழுவதும் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது 560 சந்தேக
நேற்று (14) நாடு முழுவதும் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது 560 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பொலிஸாரால் சுமார் 30,855 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 19 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்த 312 நபர்களும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 113 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 374 ஓட்டுநர்களும், அஜாக்கிரதையாக வாகனம் செலுத்திய 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,102 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வாறான விசேட தேடுதல் பணிகள் நாடு முழுவதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.