பெரும் போக நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு
2025 – 2026 பெரும் போகத்திற்கான நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ், நெல்லுக்கான நிர்ணய
Published February 16, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 – 2026 பெரும் போகத்திற்கான நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ், நெல்லுக்கான நிர்ணய விலைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யு. பின்னலந்த (A.M.U. Pinnalanda) இது தொடர்பான விபரங்களை விளக்கினார்.
அறிவிக்கப்பட்டுள்ள கொள்வனவு விலைகள் (ஒரு கிலோவிற்கு):
கீரி சம்பா: ரூபா 140
சம்பா: ரூபா 130
நாடு நெல்: ரூபா 120
இந்த முறை நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.