இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதும் இலங்கை

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய

Published February 16, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) இரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை அணிக்கு தசுன் ஷானக்க தலைமை தாங்குவதுடன், அவுஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் வழிநடத்துகிறார்.

இலங்கை அணி இப்போட்டியில் வெற்றியீட்டும் பட்சத்தில், ‘பி’ பிரிவின் கீழ் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

தற்போது அந்தப் பிரிவின் புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது.

சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் அவுஸ்திரேலிய அணிக்கு இப்போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *