இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப்

Published February 17, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ‘குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்’ ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நீதி அமைச்சின் செயலாளரால் கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தச் சட்டமூலங்கள் தற்போதைய வடிவில் முன்னோக்கி கொண்டு செல்லப்படமாட்டாது எனச் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலாக, குறித்த சட்டமூலங்கள் மீளாய்வுக்காக நிபுணர் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அவை புதிய சட்டமூலங்களாக மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

இதன் காரணமாக, மனுதாரர்கள் தமது மனுக்களை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதால், அரசியலமைப்பின் 121.3 பிரிவின் கீழ் இது குறித்து முறையான தீர்மானத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தைப் பாராளுமன்றத்தின் இன்றைய உத்தியோகபூர்வ ஹன்சாட் அறிக்கையில் அச்சிடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *