இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்த ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும்
Published February 18, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோரை இன்று (18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அங்கு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.