உலகம் முழுவதும் தடைபட்ட யூடியூப் சேவை – மீண்டும் இயல்பு நிலைக்கு

உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப்.......

Published February 18, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப் (YouTube) தளத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில மணிநேரங்களாகக் காணொளிகளைப் பார்ப்பதிலும், கணக்குகளை அணுகுவதிலும் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் எதிர்கொண்ட “Something went wrong” சிக்கல்கள் தற்போது நீக்கப்பட்டு, தளம் சீராக இயங்கத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *