தொழிற்சங்க நடவடிக்கையில் சுங்க அதிகாரிகள்?

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல

Published February 24, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுங்க அதிகாரிகள் கூட்டணி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பலமுறை தங்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் முறையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுங்க அதிகாரிகள்கூட்டணி தெரிவித்துள்ளது.

எனவே, இன்று (24) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் சுங்க அதிகாரிகள் கறுப்பு நிற ஆடை அணிந்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும் 26ஆம் திகதி நிதி அமைச்சகம் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழு உட்பட பல தரப்பினருடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் இறுதியில் சுங்க தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதிகள் அடுத்த வெள்ளிக்கிழமை கூடி தங்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து மேலும் முடிவுகளை எடுப்பார்கள்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *