இலங்கை – நியுசிலாந்து இன்று மோதல்!

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது

Published February 25, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (25) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

அரையிறுதிச் சுற்றுக்கான நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின், இலங்கை அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

இப்போட்டிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனையாகி முடிந்துள்ளதால், பிரேமதாச விளையாட்டரங்கின் நுழைவாயில்கள் பிற்பகல் 4 மணிக்கே திறக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 28 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் 16 போட்டிகளில் நியூசிலாந்தும், 9 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 6 டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் 3 போட்டிகளில் நியூசிலாந்தும், 2 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *