இன்றைய மோதல் – சிம்பாபேவுடன் இந்தியா
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா ...........
Published February 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது போட்டியில் சிம்பாப்வேயுடன் இன்று மோதுகிறது.
அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொள்ள, இந்தியா இந்த போட்டியில் வெல்ல வேண்டியது அவசியம் என்பதுடன், அதை மிகப்பெரிய வெற்றியாகப் பெற வேண்டும் என்பதே முக்கியமாகும்.
சூப்பா் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த மோசமான தோல்வியே இந்தியாவை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. எனவே, துடுப்பாட்டம் , களத்தடுப்பு என எந்தவொரு நிலையிலும் செய்யும் சிறு தவறும் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும் நெருக்கடியில் இந்தியா உள்ளது.