பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் வீழ்ச்சி!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2026 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு
Published February 27, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 2026 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (CCPI) மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதத்தை இன்று (27) வெளியிட்டுள்ளது.
அதன் விபரங்கள் வருமாறு:
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2026 பெப்ரவரி மாதத்தில் 1.6% ஆகக் குறைந்துள்ளது. இது 2026 ஜனவரி மாதத்தில் 2.3% ஆகப் பதிவாகியிருந்தது.
2026 பெப்ரவரி மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டுப் பணவீக்கம் 0.2% ஆகக் குறைந்துள்ளது. இது 2026 ஜனவரி மாதத்தில் 3.3% ஆகக் காணப்பட்டது.
2026 பெப்ரவரி மாதத்திற்கான உணவு அல்லாத பிரிவின் ஆண்டுப் பணவீக்கம் 2.3% ஆக அதிகரித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் இது 1.8% ஆகப் பதிவாகியிருந்தது.