iPhone பயனர்களுக்கு WhatsApp Web உள்நுழைவதில் சிக்கல்!

இன்று (27) காலை உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் அதன் கணினி பதிப்பான

Published February 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இன்று (27) காலை உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் அதன் கணினி பதிப்பான WhatsApp Web சேவையைப் பயன்படுத்துவதில் இடையூறுகளை எதிர்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிகப்படியான பாதிப்பு ஐபோன் iPhone பயனர்களுக்கே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலிழப்பு குறித்து Down detector இணையதளத்திற்குப் பல புகார்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது வரை இந்த இடையூறு தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதன்படி, உலகளவில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்தப் பிரச்சினை நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. எனினும், ஆண்ட்ராய்டு (Android) பயனர்கள் பலருக்கு இந்தச் சேவை வழக்கம் போல் இயங்குவதாக அந்த ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers தொழில்நுட்பம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *