LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்!ஹம்பாந்தோட்டையில் தேங்கிய 1,025 இறக்குமதி வாகனங்கள்!இலங்கை பொலிஸில் 383 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் கோரல்!
உள்ளூர்

அநுராதபுரத்தில் தேசிய வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்

February 27, 2026 · Tamil Ceylon LK

ஹிமிகம பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்றுபிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இதன் காரணமாக,தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களில் உள்ள நிபந்தனைகளை நீக்கி 1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கு இணங்க, அவற்றுக்குப் பதிலாக ‘பூரண அளிப்புப் பத்திரம்’ வழங்கப்படும். 

தங்கள் விருப்பத்தின் பேரில் அனுமதிப்பத்திரங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பவர்களுக்கு இந்த புதிய ‘ஹிமிகம’ உரித்து பூரண அளிப்புப் பத்திரம் வழங்கப்படவுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் 500 பயனாளிகளுக்கு இந்த அளிப்புப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. 

இதனைத் தொடர்ந்து இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

Related Stories

மேலும் ›