தீர்மானம் மிக்க போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி

சர்வதேச உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இன்றைய தினம்

Published February 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

சர்வதேச உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரையில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *