ஆப்கானிஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் நகரங்கள் மீது தாக்குதல்களை ............
Published February 27, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக நடத்தப்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதில் வழங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணு நிலைகளை இலக்கு வைத்து ஆப்கானிஸ்தான் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் தமது வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது.
அந்த தாக்குதலின் சில மணிநேரங்களிலேயே இந்த பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.