ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத்

Published February 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது.

அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அந்நாட்டு வான்பரப்பு ஊடான அனைத்து விமானப் போக்குவரத்துகளும் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஈரானியத் தலைநகரில் 3 பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற உடனேயே, எர்பில் (Erbil) சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் பின்னணியில், இஸ்ரேல் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தெஹ்ரான் நகரில் மூன்று வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைகளும் இணைந்துகொண்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *