நெலும்மல கிராமத்தில் மூன்றாம் மாத நினைவு அன்னதானம் நிகழ்வில் ஜனாதிபதி

‘டித்வா’ சூறாவளியினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, நெலும்மல கிராமத்தில்

Published February 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

‘டித்வா’ சூறாவளியினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, நெலும்மல கிராமத்தில் நடைபெற்ற மூன்றாம் மாத நினைவையொட்டிய அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்லேகலதெபொக்கா கிராம அலுவலர் பிரிவின் நெலும்மல கிராமத்தில் 05 கிலோமீற்றர் இற்கும் அதிகமான பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, நேற்று பமுணுபுர படமுல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற மூன்றாம் மாத நினைவையொட்டிய அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

டித்வா சூறாவளியினால் இடம்பெற்ற இந்த மண்சரிவினால் நெலும்மல கிராமத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் உட்பட அனர்த்தத்தினால் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூர்ந்து, 70 தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் பங்கேற்புடன் இந்த அன்னதான நிகழ்வு நடைபெற்றதுடன், இதற்கு இணையாக, நேற்று முன்தினம் பிற்பகல் போதி பூஜை புண்ணிய நிகழ்வு மற்றும் பிரித் அனுசாசணையும் ஏற்பாடு செய்யப்பட்டன.

நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்குவதிலும் இணைந்து கொண்டார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் ஜனாதிபதி சிறிது நேரம் உரையாடியதுடன் அவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

சியம் மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரையின் அனுநாயக்க, வண, நாரம்பனாவே ஆனந்த அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பிரதேச மக்கள் பிரதிநிதிகள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *