அமீரகத்தில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்தவர்களில்

Published March 2, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசிக்கின்றனர்.

இலங்கைக்கான தூதரகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசரத் தேவைகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக விசேட சேவையொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, பாதுகாப்பான இடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான ஆலோசனைகளைத் தூதரகம் மற்றும் டுபாய் கொன்சியூலர் அலுவலகம் தமது பேஸ்புக் பக்கத்தின் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், அவற்றைச் சரிபார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *