வீடொன்றில் தீ விபத்து
கம்பளை - நுவரெலியா பிரதான பாலத்திற்கு அருகில், மகாவலி ஆற்றங்கரையில் அமைந்துள்ள
Published March 5, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கம்பளை – நுவரெலியா பிரதான பாலத்திற்கு அருகில், மகாவலி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கம்பளை – தொழுவ பிரதான வீதியில் மகாவலி ஆற்றை அண்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு இன்று தீப்பிடித்துள்ளது.
இந்தத் தீ விபத்தினால் வீட்டிலிருந்த பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கம்பொளை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் கம்பொளை நகர சபையின் நீர் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வீடு கடுமையாகத் தீப்பிடித்து எரிந்தமையினால், வீட்டிலிருந்த பல பெறுமதியான பொருட்கள் தீயினால் அழிவடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.