சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் : பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடு......
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர், இந்த ஆணைக்குழு ஊடாக அரச சேவையின் சம்பள முரண்பாடுகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.