குருநகர் படகு விபத்து: காணாமல் போனவர்களை தேடும் முயற்சி

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று படகு ஒன்று .........

Published March 6, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

விபத்துக்குள்ளான குறித்த படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டிருந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர். 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார். 

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *