குஷ், ஹஷீஸ் கடத்திய நபர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ்..........
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 6 கிலோ 590 கிராம் குஷ் மற்றும் 4 கிலோ 910 கிராம் ஹஷீஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.