திருகோணமலையில் மகா வித்தியாலயத்தில் கணித ஆய்வகம் திறந்து வைப்பு
இன்று திருகோணமலை கோமரங்கடவெல மகா வித்தியாலயத்தின் மாகாண கல்வி...........
Published March 6, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று திருகோணமலை கோமரங்கடவெல மகா வித்தியாலயத்தின் மாகாண கல்வி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.20 மில்லியன் செலவில் கணித ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் கொண்ட புதிய இரண்டு மாடி கட்டிடம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர்களின் தலைமையில் மாணவர்களிடம் திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வி பணிப்பாளர், கோமரங்கடவல பிரதேச சபைத் தலைவர், திருகோணமலை வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.