சர்வதேச மகளிர் தினம் இன்று
பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான ...........
Published March 8, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தில் பிரதானமாக மூன்று நிறங்கள் பயன்படுத்தப்படுவதுடன், அது ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களால் பிரதிபலிக்கப்படுகிறது.
ஊதா நிறம் நீதி மற்றும் கௌரவத்தையும், பச்சை நிறம் நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது. அதே போன்று வெள்ளை நிறம் தூய்மையை அடையாளப்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது.