40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு
போதைக்கு முற்றுப்புள்ளி தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட.....
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
போதைக்கு முற்றுப்புள்ளி தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கையின் போது, தொடங்கொட மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடங்கொட பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த ஒரு முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது, அதிலிருந்த நபரிடமிருந்து சுமார் 225 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.