குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ......
Published March 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 27 வயதுடைய இந்திய பிரஜை என தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து 2 கிலோ கிராம் 762 கிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.