இலங்கை – ஆப்கான் கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

நாளை முதல் சார்ஜாவில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை......

Published March 11, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நாளை முதல் சார்ஜாவில் நடைபெறவிருந்த ப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை மற்றும் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 இதன்படி, குறித்த தொடரை இந்த ஆண்டின் இறுதிப் காலாண்டில் நடத்துவதற்குத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *