சிசு செரிய சேவை : மேலும் 200 பேருந்துகள்
சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக..........
Published March 12, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இசுருபாய வளாகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து இந்த ‘சிசு செரிய’ பேருந்து சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.