அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு
நேற்று அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஊடகவியலாளர்களின்.........
Published March 13, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேற்று அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதான உரையை சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள், வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் அவர்கள், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.