சுற்றுலாப் பயணிகளின் வருகை : சுற்றுலாத் துறை பிரதியமைச்சர்
நேற்று திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண.......
நேற்று திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண விசேட சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன, துறைசார் திணைக்கள பணிப்பாளர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை பதிப்பிற்குள்ளாகி இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் ஏற்பட்ட குறித்த சூழ்நிலையில் இருந்து மீண்டு எழுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் இந்த நிலைமை சீர் செய்யப்பட்டு சுமூகமான நிலைக்கு நாடு திருப்பமடையும் எனவும் அவர் தெரிவித்தார்.