அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள சூழ்நிலையில்..........

Published March 15, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. 

விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஜிட்டல் குறியீட்டு (QR) முறையை விரைவாக முறைப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers Breaking and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *