அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி .......
Published March 15, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
ஈரானிய வங்கி கட்டிடங்களுக்கு அருகில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நாட்டின் வங்கிச் செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
அதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க வங்கி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்களை நடத்தியிருந்தது.