LATEST
மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!
உள்ளூர்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

March 18, 2026 · Tamil Ceylon LK

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,945 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அனுமதிப்பத்திரமற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு இந்த நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களுக்கு எதிராக 244 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அக்காலப்பகுதியில் பணியகத்திற்கு 2,081 பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இக்காலப்பகுதியில் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் 19 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 88 மோசடியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் அனுமதிப்பத்திரம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைச் சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, இஸ்ரேல், தென்கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சமூக ஊடகங்கள் ஊடாக பண மோசடி செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. எனவே, பணியகத்திடம் வினவல்களை மேற்கொள்ளாமல் இவ்வாறான மோசடியாளர்களுக்குப் பணம் செலுத்துவதையோ அல்லது தனிப்பட்ட ஆவணங்களை வழங்குவதையோ தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

மேலும் ›