கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய............
Published March 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலுக்கு அருகிலுள்ள ஈரானிய எரிசக்தி மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை நிலவிய விலையை விட 5% க்கும் அதிகமாக உயர்ந்து, 109.91 டொலர்களாக பதிவாகியுள்ளது. இருப்பினும், சிறிது நேரத்தின் பின்னர் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. அதேவேளை, பிரித்தானியாவின் இயற்கை எரிவாயு விலையும் 6% ஆல் அதிகரித்துள்ளது.