இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்
QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது,.........
Published March 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.