PSL தொடரிலிருந்து விலகிய தசுன் ஷானக…

இலங்கை அணியின்வீரர் தசுன் ஷானக, தற்போது நடைபெற்று.....

Published March 22, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை அணியின் துடுப்பாட்ட அணியின் வீரர் தசுன் ஷானக, தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் அவர் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாகத் தசுன் ஷானகவை அணியில் இணைத்துக்கொள்வது தொடர்பாக ஐ.பி.எல் அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *