அடுத்த மாதம் மின்வெட்டு குறித்த அச்சம் தேவையில்லை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்.....
Published March 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருண உறுதிப்டுத்தியுள்ளார்.
தற்போதைய எரிபொருள் இருப்பு மற்றும் இறக்குமதித் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த மாதம் முழுவதும் தடையின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.