சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக.......
Published March 24, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கையூட்டல், ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட ஆட்சேபகளைப் பரிசீலித்த நீதவான், வழக்கின் முற்பரிசோதனை மாநாட்டிற்காக ஏப்ரல் 30 ஆம் திகதியை நிர்ணயித்தார்.