போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மாலபே பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் ..........

Published March 24, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மாலபே பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் உள்ளிட்ட 3 கிலோவிற்கும் அதிகளவான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாலபே பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மாலபே கஹந்தோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபரிடமிருந்து 1 கிலோ 728 கிராம் ஹெரோயின், 1 கிலோ 171 கிராம் ஐஸ் மற்றும் 497 கிராம் குஷ் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை, கெகுணகஹவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *